மதுரவாயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

x

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா, முகலிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், மணிகண்டனின் சகோதரியான மணிமேகலை என்பவர் அதே தெருவில்

தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி குழந்தைகளுடன் அண்ணன் வீட்டிற்கு வருவதால், பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீபாவளியன்று ஏற்பட்ட பிரச்சனையில் பிரியங்கா, தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்