லிங்க் தொட்ட... நீ கெட்ட.. திடீரென டெலிகிராமில் வந்த சத்தம்..!ஒரே சொடக்கில் காணாமல் போன பணம்

x

சென்னை பாடி சத்யா நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர்,

டெலிகிராம் ஆப் வாயிலாக வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டார். அப்போது, வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி, பான் கார்டு, ஆதார் கார்டை சேகரித்து, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும்படி கூறியுள்ளனர். அதன்படி 10 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், டெலிகிராம் முகவரி செயலிழந்ததால், அதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதில், ஆன்லைனில் வேலை தேடும் நபர்களை, குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்த சொல்லி ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக விவேகானந்தன், ஹலிக்குள் ஜமால், அஷ்கர் ஷெரிப் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். ஆன்லைன் வாயிலாக வசூலித்த பணத்தை, பான், ஆதாரை கொண்டு புதிய வங்கிக்கணக்கு தொடங்கி, அந்தப்பணத்தை சீனா கேம்ப்லிங் ஆப் மற்றும் ஆன்லைன் மோசடி நபர்கள் வாயிலாக யு.எஸ். வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், மடிக்கணினிகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்