திடீரென நடுரோட்டில் பொங்கி எழுந்த தண்ணீர்-வெள்ளக்காடாக காட்சியளித்த சாலை-வெளியான பரபரப்பு காட்சிகள்

x

வேலூர் அருகே அரியூரில், காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால், பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர் சாலையில் ஓடி வீணானது. ஏஜி நகரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக குழாய் உடைப்பு சரிசெய்யப்படாததால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், அருகிலிருந்த மின் வயர்களில் தண்ணீர் பீய்ச்சு அடித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்