திடீரென மேடையில் அழுத அமைச்சர் - கண்கலங்கி பார்த்த பெண்கள்

x

திடீரென மேடையில் அழுத அமைச்சர் - கண்கலங்கி பார்த்த பெண்கள்

கணவனை இழந்த உங்களின் வலி, மனைவியை இழந்து வாழும் எனக்கு தெரியும் என்று கூறி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் கணவனை இழந்த பெண்கள் இரண்டாயிரம் பேருக்கு, தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கணேசன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மனைவியை இழந்து வாழ்வது போல் நீங்கள் கணவனை இழந்து வாழ்வது எவ்வளவு சிரமம் என்று கூறி தனது மனைவி பவானி அம்மாளை நினைத்து மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது நிகழ்ச்சியில்கலந்து கொண்ட பெண்கள் கண் கலங்கினர்


Next Story

மேலும் செய்திகள்