திடீரென மாயமான கன்றுக்குட்டி..சிக்கிய மர்ம விலங்கின் கால்தடம்..அச்சத்தில் பொதுமக்கள்..

x

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த கிழக்கு தலவுமலை வனபகுதியையொட்டியுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மர்மவிலங்கு, கன்றுக்குட்டியை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், மர்ம விலங்கின் கால்தடம் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். அது சிறுத்தையாக இருக்கலாம் என சந்தேகித்துள்ள வனத்துறையினர், சம்பந்தப்பட்ட பகுதி உட்பட 3 இடங்களில் கூண்டு வைத்துள்ளதோடு, அப்பகுதியை சுற்றிலும் 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். அரச்சலூர், தலவுமலை, வெள்ளிவலசு உள்ளிட்ட இடங்களில் வனத்துறையினர் 6வது நாளாக ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மர்ம விலங்கு பிடிபடும்வரும் வரை பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்