திடீர் IT ரெய்டு.. பரபரப்பான நெல்லை... கையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
#itraid | #nellai
திடீர் IT ரெய்டு.. பரபரப்பான நெல்லை
கையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
இரவோடு இரவாக குவிந்த தொண்டர்கள்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து திமுகவினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பனின் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் அலுவலகம் அருகே திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வருமானவரித்துறை உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையிலான குழவினர் சோதனை நடத்தி, பாக முகவர்கள், வட்டச் செயலாளர்கள் ஆகியோருக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களைக் கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது
அலுவலகத்தில் இருந்து பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், தன்னை பிரச்சாரத்திற்கு செல்ல விடாமல் 2 மணி நேரத்துக்கு மேலாக தடுத்து வைத்து விட்டனர் என்றும் ஆவுடையப்பன் குற்றம்சாட்டினார்.