பெண்கள் விடுதியில் திடீர் ஆய்வு - காலாவதியான ரவையில் உப்புமா..! அதிகாரிகளை வறுத்தெடுத்த வேல்முருகன்

x

அரியலூர் மாவட்டம் திடீர்குப்பத்தில் உள்ள அரசு பெண்கள் விடுதியில், தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். உணவின் தன்மை சரியில்லாத நிலையில், காலாவதியான ரவையில் உப்புமா செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த விடுதியின் வார்டனை எச்சரித்து, அனைத்து ரவை பாக்கெட்டுகளையும் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்