திடீரென விடாமல் கொட்டிய மழை.. குளுகுளுவென மாறிய தமிழகம் - குஷியான மக்கள்

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் பெய்த மழையால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், மழையின் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்

கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான நயினார் பாளையம், இந்திலி, கருங்குழி, தஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது..


Next Story

மேலும் செய்திகள்