பள்ளி மாணவர்கள் உடம்பில் திடீர் மாற்றம் - மருத்துவமனையில் மேல் சிகிச்சை - திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், 33 மாணவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே வாந்தி எடுத்த 7 மாணவ - மாணவியர்கள், மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த திருப்பத்தூர் ஆட்சியர், ஆரம்ப சுகாதார நிலைத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம் நலம் விசாரித்த நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story