கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க ஆய்வு - களமிறங்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி

x

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.5 ஏக்கரில் 394 கோடி ரூபாய் செலவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மழைநீர், ஜிஎஸ்டி சாலையில் தேங்குவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை தடுக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜான் லூயிஸ் தலைமையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மழைநீரை கிளாம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள வடிகால் பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்தப் பணிகளுக்காக, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சிறு பாலம் அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ஒரு வாரத்தில் அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளது. பருவமழை காலத்திற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்