"படித்தால் தான் சமூகத்தில்..." - எம்பி கனிமொழி சொன்ன அட்வைஸ்
சமூகத்தை மாற்ற வேண்டும் என நினைத்தவர்களை, பற்றி படித்தால் தான், சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்கள் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, மாணவர்களால் எடுத்த பெண்களின் புகைப்படக் கண்காட்சியை கனிமொழி பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, இந்தியாவில் பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று கூறினார். அதே நேரத்தில் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று மறுக்கக்கூடிய சமுதாயமாக இருக்கிறது என்றும் கூறினார்.
Next Story