ரூ.43,000 பணம் அனுப்பிய தந்தை | த*கொலை செய்து கொண்ட இளைஞர் | போலீசார் தீவிர விசாரணை

x

குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 28 வயது இளைஞர் குரோம்பேட்டை, லட்சுமி புரத்தில், 6 மாதங்களாக தங்கி, மறைமலை நகரில் உள்ள தனியார் வீட்டு மனை விற்பனை நிறுவனத்தில், விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். நேற்று தனது தந்தைக்கு போன் செய்த கார்த்திகேயன், கணிணி தொடர்பான படிப்பு படிக்க பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். அவரது தந்தையும், ஜி பே மூலம், 43 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். தொடர்ந்து, மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, கார்த்திகேயன் அழைப்பை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது துரைப்பாக்கத்தில் தங்கியுள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்தார். அவர், அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, கார்த்திகேயன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்