பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்... வெளியான முக்கிய தகவல்
கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 29 ஆயிரத்து 352 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை குறைவாக எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 1ஆம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன.
கடந்தாண்டு, 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். ஆனால், இந்த ஆண்டு, 29 ஆயிரத்து 352 மாணவர்கள் குறைவாக எழுதுகின்றனர். அதாவது, 7 லட்சத்து 74 ஆயிரத்து 33 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். கொரோனா காலகட்டத்திற்கு பின், ஏராளமான மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கு பிறகு, 11-ம் வகுப்பில் சேராமல் போனதே மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.....
Next Story