மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன்.. போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..
சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜய் சாரதி என்ற இளைஞர் பூசாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கல்லூரி முன்பாக இருக்கும் கழிவுநீர் கால்வாயில் மயங்கி கிடந்துள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், உடலில் வெட்டுக் காயங்கள் இருப்பதாக கூறிய மாணவரின் பெற்றோர், உடலை வாங்க மறுத்து, கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து, போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story