சாப்பிடும் உணவை வைத்து தரக்குறைவாக நடத்தப்பட்டாரா மாணவி? - கோவை விவகாரத்தில் புதிய தகவல்

x

கோவை அருகே அரசு பள்ளி மாணவியின் பெற்றோர் அளித்த புகார் குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் காவல் துறையினர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

கோவை துடியலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பெற்றோர், முதன்மைக் கல்வி அலுவலர் பால முரளியிடம் புகார் மனு அளித்தனர். அதில், தங்கள் மகளிடம் அபிநயா எனும் ஆசிரியர் கடுமையாக நடந்துகொண்டதாகவும், உணவை முன்வைத்து தரக்குறைவாக பேசி அடித்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். மேலும், பிற மாணவிகளின் காலணிகளை ஆசிரியர் அபிநயா தங்கள் மகளை துடைக்க வைத்ததாகவும் மனுவில் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக கோவை முதன்மைக் கல்வி அலுவலர் பால முரளி மற்றும் போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, மாணவியின் பெற்றோர் அளித்துள்ள புகார் போலியானது என்றும், அது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்