தெரு தெருவாக ED திடீர் ரெய்டு - சென்னை சவுகார்பேட்டையில் அதிரடி
தெரு தெருவாக ED திடீர் ரெய்டு - சென்னை சவுகார்பேட்டையில் அதிரடி
வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை கடைகளில், அமலாக்க துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள மோகன்லால் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இதில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை ஒரு மணி அளவில், அந்த
கடையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்களை அமலாக்க துறையினர் ஆய்வு செய்தனர். இதே போல் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள டிபி கோல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தங்கக் கட்டிகளை மொத்தமாக விற்பனை செய்யும் நகை கடை, அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். இதே போல் ஜேகே ஜுவல்லரி, சி.எஸ்.வி.இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.