தமிழ்நாட்டில் புயல் எதிரொலி..6அடி உயரத்திற்கு எழும் ராட்சத அலை-3வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினத்தில் 3வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 4 அடி முதல் 6 அடி வரை ராட்சத அலை எழுகிறது. பலத்த காற்று, கனமழை காரணமாக, கல்பாக்கம் அடுத்த சூளேரிக்காடு, கொக்கிலமேடு, புதுப்பட்டினம் உய்யாலிகுப்பத்தை சேர்ந்த மீனவர்கள், 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி படகுகள் அனைத்தும் கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
Next Story