சிறப்பு SI மரணம்.. 6 மாதம் சிறை விதித்து தீர்ப்பு

x

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் மினிவேன் மோதி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த வழக்கில், வாகன ஓட்டுநருக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆலங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2021ம் ஆண்டு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த டாடா ஏசி வாகனம் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு காட்பாடி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஓட்டுநர் எழிலரசனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்