ஸ்ரீரங்கம் டூ திருப்பதி... ஏழுமலையானுக்கு ரங்கநாதர் அனுப்பிய பரிசு... யானை மீது வைத்து பவனி...

x

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை புறப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முதலாம் நாள் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

19-வது ஆண்டாக வஸ்திர மரியாதை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த வஸ்திரங்கள் 17-ம் தேதியன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஸ்ரீபத்மாவதி தாயார், ஸ்ரீதேவி தாயார் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு பட்டுப்புடவைகள், மாலை மற்றும் மங்களப் பொருட்கள், மேளதாளங்கள் முழங்க கோயில் யானை ஆண்டாள் மீது வைத்து உள்பிரகாரங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் ஸ்ரீரங்கம் கோ​யில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், பட்டாச்சார்யார் மற்றும் கோயில் நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கொண்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்