நீதிமன்றம் போட்ட உத்தரவு - ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஏற்படும் மாற்றம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தெற்கு கோபுரம் அடுத்துள்ள ரங்க விலாச மண்டபம் பகுதியில் ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாக 33 கடைகள், கோவிலுக்கு மாத வாடகை செலுத்தி செயல்பட்டு வந்தன. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த கடைகளை அகற்ற கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான உத்தரவு நகல் கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டது. இதை அடுத்து 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த கடைகளை அகற்றும் பணியில் இன்று கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன. மீதமுள்ள கடைக்காரர்கள், நீதிமன்ற உத்தரவை ஏற்று கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு அகற்றாவிட்டால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.