தமிழக பெண்ணை கரம்பிடித்த இலங்கை தமிழருக்கு வந்த சிக்கல்

x

தமிழகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இலங்கை இளைஞருக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரித்து விசா நீட்டிப்பு வழங்குமாறு வெளியுறவுத் துறைக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த சரவணபவன் என்பவர், தமிழகம் வந்தபோது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவசக்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு விசா நீடிப்பு வழங்கப்படாததால், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு முறையாக திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரித்து விசா நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்