சீறி பாய்ந்த கார்கள்.. சிக்கிய மூதாட்டி.. அசோக் பில்லரை அதிர வைத்த விபத்து..

x

அசோக் பில்லர் பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஜெயமலை நின்று கொண்டிருந்த போது வட பழனியிலிருந்து கிண்டி நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி மீது மோதியதில் அவர் கீழே விழுந்து இடது கால் மற்றும் நெற்றி பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. போக்குவரத்து காவல் துறையினர் காரை ஓட்டி வந்த ஹரிஹரன் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.. அப்போது அந்த நபர் அங்கிருந்த பொதுமக்களுடனும், காவலர்களுடனும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது. காயம் அடைந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹரிஹரன் சாலை காலியாக இருந்ததால் மற்றொரு நபருடன் கார் பந்தய போட்டியில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே காரை வேகமாக இயக்கி வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மற்றொரு காரை ஓட்டி வந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்