சென்னை ரோட்டில் வேக வரம்பு... விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு

x

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் போக்குவரத்து காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சமய்சிங் மீனா, சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை 40 கிலோ மீட்டராக நிர்ணயிப்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த கமிட்டியில், ஐ.ஐ.டி நிபுணர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொல்கத்தா,பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் வேக வரம்பு தொடர்பான புள்ளி விவரங்களை அந்த கமிட்டி பெற்று வருவதாகவும், அந்த கமிட்டி அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சென்னையில் வேக வரம்பை நடைமுறை படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சமய்சிங் மீனா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்