தி.மலையில் சிறப்பு அன்னதானம் - சாமை பிரியாணி, குதிரைவாலி பொங்கல்.. - இது தான் காரணமா?

x

திருவண்ணாமலையில், சிறுதானிய ஆண்டையொட்டி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு சிறுதானிய உணவுகள் அன்னதானமாக வழங்கப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவணி மாத கிரிவலத்திற்காக திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்களுக்கு

சாமை கிச்சடி, குதிரைவாலி பொங்கல், வரகு தயிர் சாதம், தினை கஞ்சி உள்ளிட்ட உணவுகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்