"தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடக்கம்" - "10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"

தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x

தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்