"சோலார் பிளான்ட்"ஆல் வந்த பிரச்சனை... போர்க்கொடி தூக்கிய விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு வழி விடாமல் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் பிளான்ட் அமைத்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... தனியார் நிறுவனம் ஒன்று 30 ஏக்கர் விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி விவசாய நிலத்திற்கு வழி விடாமல் சோலார் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது... அங்கு எழுப்பப்பட்டுள்ள சுற்றுச்சுவரால் பல விவசாயிகளால் தங்கள் நிலங்களுக்குச் செல்ல முடியவில்லை. இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது...
Next Story