வைகையில் கொட்டப்பட்ட மண் - பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சால் சர்ச்சை

x

மதுரை வைகையாற்றுக்குள் கொட்டப்பட்ட மண்ணை

யார் வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

வைகையாற்றின் இரு புறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிக்காக, வைகை ஆற்றுக்குள் மண் கொட்டப்பட்டு மேடு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் கான்கீரிட் கலவை இயந்திர லாரிகள் நிறுத்தி வைத்து, பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் பணிகள் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும், மண் மேடுகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், அவை ஏராளமான லாரிகள் மூலம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதன் பேரில், அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு பணிகளுக்காக கொட்டப்பட்ட மண்ணை எப்படியாவது அகற்ற வேண்டும் என்றும், அதனால், யார் வேண்டுமானாலும் மண்ணை அள்ளிக்கொள்ளலாம் என்றும் கூறினர். அதிகாரிகளின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்