"இனி யாரும் தப்ப முடியாது.."போலி ரசீதுகளை கண்டறியும் software - வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி

x

வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித் துறை புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. வருவத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி செலுத்த தேவையில்லை. மொத்த வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வீட்டு வாடகை அளவு, வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், ரசீதுகளில், வீட்டு உரிமையாளரின் PAN எண்ணை அளிக்க

தேவையில்லை என்ற விதிமுறை உள்ளது. மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது. இதை கண்டறிந்து, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க, புதிய சாப்ட்வேர் ஒன்றை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏராளமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய முறையில், வருடத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு இந்த முறையில் தள்ளுபடி பெற முடியாது. 7 லட்சம் ரூபாய்கும் குறைந்த வருட வருவாய் கொண்டவர்கள், புதிய முறைக்கு மாற வேண்டும் என்று துறை சார் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்