8கிமீ ஓடி கொலையை தடுத்த நாய்... வெட்டி வீசப்பட்ட ஆண்-கொலையாளியை கவ்வி பிடித்த துங்கா-2..!

x

கொலையாளியைப் பிடிக்க உதவிய மோப்ப நாய் ஒன்று மற்றொரு கொலையைத் தடுத்ததுடன்... ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...அந்த பெண்... கொலையாளி... கொலையான நபர் இந்த மூவருக்கும் ஒரு தொடர்பு உள்ளது?...திரைப்படங்களை விஞ்சும் திருப்பங்கள் நிறைந்த இச்சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம்...சந்தேபென்னூர்...பெட்ரோல் பங்க் அருகே கிடந்தது ஒரு ஆண் சடலம்...

கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீசாருடன் களமிறங்கியது மோப்ப நாய் துங்கா 2...

அந்த ஆண் பிணத்தை முகர்ந்து பார்த்த மோப்ப நாய் துங்கா 2 சன்னபுரா சாலையில் மின்னல் வேகத்தில் ஓடத் துவங்கியது...

ஓடிய ஓட்டத்தைப் பார்த்தால் கொலையாளியை நெருங்கி விடுவோம் போல என எண்ணினர் போலீசார்...

கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் நில்லாமல் ஓடிய துங்கா 2... வழியில் ஒரு வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திடீரென நின்றது...

மூச்சு வாங்குகிறதோ என போலீசார் நினைக்க...அது தான் இல்லை...அதே இடத்தில் நின்று தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது...

ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த போலீசார் துங்கா 2 பார்த்துக் குரைத்த வீட்டிற்குள் நுழைந்தனர்...

உள்ளே ஒரு ஒரு பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்...

அப்பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர் ரங்கசாமி பக்கத்திலேயே நின்றிருந்தார்...

கொஞ்சம் விட்டிருந்தாலும் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியாது...

உடனடியாக அப்பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ரங்கசாமியைக் கைது செய்தனர் காவல் துறையினர்...

இது 2வது சம்பவம்...

முதல் சம்பவம் பெட்ரோல் பங்க் அருகே ஆண் சடலம் கிடந்தது... அந்த சம்பவத்தின் கொலையாளியைத் தேடி துங்கா 2 தானாகவே புறப்பட்டது...

ஒரே கல்லில் 2 மாங்காய்... ஆம்... கொலையாளி யார் தெரியுமா?... மனைவியைக் கொடூரமாக தாக்கிய ரங்கசாமி தான்...

ஆச்சரியமாக உள்ளதா?...

சந்தேபென்னூரைச் சேர்ந்த சந்தோஷுக்கும், தன் மனைவிக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகித்த ரங்கசாமி... சந்தோஷை பெட்ரோல் பங்க் அருகே வைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு...கையோடு வீட்டுக்கு வந்து மனைவியையும் கொலை செய்ய முயன்றது அம்பலமாகியுள்ளது...

இக்கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைதாகியுள்ளனர்...

இச்சம்பவத்தில் ஹீரோவைப் போல் செயல்பட்ட மோப்ப நாய் துங்கா - 2வுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்