`SMS' - வெளியான அதிரடி உத்தரவு
செல்போன்களுக்கு தேவையின்றி வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்குகளை தொடுவதால் வாடிக்கையாளர்களுக்கு பல வழிகளில் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக, தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அனுமதி பெறாத நிறுவனங்களின் யுஆர்எல், ஓடிடி, ஏபிகே முகவரி ஆகியவற்றை தடை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதுவரை 3,000 நிறுவனங்கள் தங்கள் 70, ஆயிரம் லிங்க்குகளை அனுப்புவதற்கு டிராய் அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளன. மற்ற நிறுவனங்கள், வரும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் அனுமதி பெறவில்லை எனில், அவர்கள் எந்த லிங்கையும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடியாது. இதன் காரணமாக, செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்கப்படும் என்று டிராய் அமைப்பு கூறியுள்ளது.
Next Story