அடித்து நொறுக்கப்பட்ட பள்ளி... வகுப்பறையில் மது பாட்டில்கள்... கஞ்சா கும்பல் அட்டூழியம்

x

காங்கேயம் அரசு பள்ளி வகுப்பறைகளில் மது பாட்டில்களை உடைத்து போட்டும், ஜன்னல்களை சேதப்படுத்தியும் போதை ஆசாமிகள் அட்டூழியம் செய்துள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட திருவிக நகரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து, மாணவர்களை பள்ளியில் விட சென்ற பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. வகுப்பறை கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், வகுப்பறையில் மதுபாட்டில்களை உடைத்து வீசப்பட்டும் இருந்துள்ளது. கழிவறை குழாயையும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கஞ்சா மற்றும் மதுபோதையில் இளைஞர்கள் சிலரே, இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அடிக்கடி அந்த இளைஞர்கள் இவ்வாறு செய்து வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ள பெற்றோர், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்