தமிழகத்தை உலுக்கிய 10 பேர் மரணம் - பகிரங்க எச்சரிக்கை விடுத்த கலெக்டர்
பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகளைக் கண்டறிய 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.சிவகாசி அருகே கீழ திருத்தங்கலில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பட்டாசு ஆலை பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு நடத்தினார். அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை அனுமதியின்றி உள்வாடகைக்கு கொடுத்தாலும், பட்டாசு தயாரிக்க கூடுதல் ரசாயனம் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினாலும் ஆலை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உரிமதாரர்கள், உடந்தையாக இருக்கும் போர்மேன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் ஆலைகளைக் கண்டறிய சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, கீழதிருத்தங்கல் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக கைதான ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ், குத்தகைதாரர் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.