கால்வாயில் மிதக்கும் உடல்கள்.. கண்முன்னே காணாமல் போகும் கிராமம்.. மிஞ்சிய 50 குடும்பங்களின் சோக நிலை

x

சிவகங்கை அருகே மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாட்டாகுடி கிராமம். மாத்தூர், நாட்டாக்குடி, சித்தலூர், இளங்குடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள இப்பகுதியில் சுமார் 400 ஏக்கரில் விவசாயம் தான் பிரதானம்...

ஊரில் உள்ள கால்வாய் நீரே விவசாயத்திற்கும், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் ஆதாரமாக உள்ள நிலையில் அதே கால்வாயில் இறந்து போன கோழிகள் மிதக்கிறது என்றால் யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?

அதிலும் ஒன்றல்ல.. இரண்டல்ல.. சுமார் 500 கோழிகள் செத்து மிதக்கிறது என்றால் நினைத்து பார்க்கவே முடியவில்லை...

இங்கிருந்து வரும் துர்நாற்றத்தால் சாப்பிடக் கூட முடியாமல் தவிக்கின்றனராம் கிராம மக்கள்...

பிராய்லர் கோழியை புதைத்தாவது இருந்திருக்கலாம்

400 - 500 கோழிகளை கால்வாயில் கொட்டிட்டாங்க

ஊரே நாற்றமாக உள்ளது, குளிக்க முடியல..

நோயோட தான் வாழ முடியும் போல...

குடிக்கும் தண்ணீரும் சரியில்லை.. துர்நாற்றமும் தாங்க முடியவில்லை என்பதால் செய்வதறியாது தவித்த மக்களில் பாதிக்கும் மேல் வேறு ஊர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து இருக்கிறார்களாம்..

இப்போதைக்கு 50 குடும்பங்கள் மட்டுமே வசித்து வரும் சூழலில் இவர்களின் நிலை என்னவாவது? கால்வாயில் உள்ள கோழிகளை அகற்றி சுகாதாரமான நீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்