சிவகங்கைக்காக திறக்கப்பட்ட அணை - பாய்ந்து வரும் வைகை

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் சிவகங்கை மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி 15 நாட்களுக்கு மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்காக கடந்த நான்கு நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நேற்றுக் காலை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வருகிற 19 ஆம் தேதி வரையில் 4 நாட்களுக்கு சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 19ந்தேதி காலை தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு அதன் 21ந்தேதி காலை முதல் 26ந் தேதி வரையிலான 6 நாட்கள் மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அணைக்கு இல்லாத நிலையில் கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. தற்போது 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ளது. கடந்த 5 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் சுமார் 7 அடி வரை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்