திருநங்கையோடு நபர் செய்த காரியம்.. 3 ம் கண் மூலம் தெரியவந்த உண்மை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஆணைவாரியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயலில் உள்ள தனது உறவினரிடம் பணம் கொடுப்பதற்காக, தனது உறவினர் கருப்பையா என்பவரிடம் 2 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளார். கருப்பையா, இருசக்கர வாகனத்தில் காரைக்குடி அருகே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் தன்னை வழிமறித்து மிளகாய் பொடியை தூவிவிட்டு பணத்தை கொள்ளையடித்ததாக பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததுடன் கருப்பையாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுவயலைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் திருநங்கை மகா என்பவருடன் சேர்ந்து கருப்பையா நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்....