திடீரென வெடித்து சிதறிய வீடு - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

x

சிவகங்கை அடுத்த அரசனேரீ கீழமேடு என்ற கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கிராமத்தில் 2 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அரவிந்தன் என்பவர் அடிக்கடி வந்து சென்ற நிலையில், கிராமத்தில் உள்ள ஓட்டு வீட்டு ஒன்றில் வெடி குண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை சேகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சிலரை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டுகளை மர்மநபர்கள் தயாரித்து வந்ததாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், சம்பவம் குறித்தான விசாரணையை கையிலெடுத்த போலீசார், தலைமறைவாக உள்ள அரவிந்தன் உட்பட சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்