2010ஆம் ஆண்டில் லஞ்சம் வாங்கிய SI - நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு
சிவகங்கையில் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு புகார் கொடுக்க வந்தவரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, காளையார்கோவில் எஸ்.ஐ. செங்குட்டுவன் கையும் களவுமாக பிடிபட்டார். தற்போது அவரது பணிக்காலம் முடிந்த நிலையில், 6 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
Next Story