கிருஷ்ண ஜெயந்தி திருவிழா - விறுவிறுப்பாக நடந்த மாட்டுவண்டி பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் அருகே நெடுவதாவு கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 11 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 18 ஜோடிகள் கொண்ட 29 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற முதல் 4 மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Next Story