`நீ சொன்ன நான் வந்துட்டேன்'.. தொழிலாளி வீட்டு நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி

x

தனது சிங்கப்பூர் முதலாளியை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்து தொழிலாளர் மகிழ்வித்த நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகங்கை மாவட்டம் வளையம்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர், சிங்கப்பூரில் கென் ஜோங் இன் என்பவரது நிறுவனத்தில் Project Manager-ஆக பணியாற்றி வருகிறார். இவர் தனது இரு மகன்களுக்கு புனித செபஸ்தியார் ஆலயத்தில் புனித இறை ஏற்பு விழாவை நடத்திய நிலையில், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த தனது முதலாளியை தமிழர் பாரம்பரியப்படி வேட்டி கட்ட வைத்து, சாரட் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்