பழனி முருகனுக்கு பூமி தானம்..! அரசரின் கொடை... சிவகங்கை சீமை செப்பேடு கண்டுபிடிப்பு
பழனியில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. பழனிமலைக் கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பரின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த செப்பேடு சிவகங்கை சீமையின் அரசர் விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழனி முருகனுக்கு அளித்த பூமி தானம் எனும் நிலக்கொடையை பற்றி கூறுகிறது என தெரிவித்தார். மேலும் இந்த செப்பேடு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.
Next Story