சிவகங்கையை சோகத்தில் மூழ்க வைத்த லெட்டர் - நியோ மேக்ஸால் நடந்த விபரீதம்
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் ராமலிங்கம். டைல்ஸ் கடை உரிமையாளரான இவருக்கு, திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. 25 லட்ச ரூபாய் வரை ராமலிங்கம் முதலீடு செய்தததாகவும், மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரையும் முதலீடு செய்ய வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து அறிந்து மன உளைச்சலில் இருந்த ராமலிங்கத்திடம் அவரது உறவினர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடிதம் எழுதி வைத்து விட்டு ராமலிங்கம் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story