மனுதாரராக மாறிய அதிகாரி... முடியாத பிரச்சனைக்கு தானே முற்றுப்புள்ளி வைத்த அலுவலர்

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்காக மணல் அள்ளிய இடம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சிவகங்கை பேரூராட்சி உதவி இயக்குனரிடம், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் தகவல் கேட்டுள்ளார். எனினும் தகவல் கிடைக்காததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் அவர் முறையிட்டார். இதையடுத்து, மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி, பேரூராட்சி செயல் அலுவலர் மனுதாரருக்கு தகவலை வழங்காமல், மனுதாரர்போல் போலியாக கையொப்பமிட்டு, விசாரணையை முடித்துக் கொள்ளுமாறு, மாநில தகவல் உரிமை ஆணையத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலியாக கையொப்பமிட்டு தகவலை அனுப்பி வைத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய வேண்டுமென ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்