ஆசிரியராக மாறிய ஆட்சியர்.. நெகிழ்ச்சியின் உச்சிக்கு போன கலெக்டர்-ன் செயல் | Sivagangai
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில், உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் காளையார்கோவில் தாலுகாவில் நடை பெற்றது.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிற மாவட்ட துறை அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்றனர்.
முடிகரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு நடத்தினார். அங்கிருந்த மாணவர்களின் ஆங்கில புலமையை அறிந்து கொள்ள அவரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார். முடிக்கரை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்பித்து ஆசிரியராக செயல்பட்டார். பாடம் எடுக்கும் போதே மாணவர்களிடம் ஆங்கிலம் சார்ந்த வினாக்களை கேட்டு அவர்களது ஆங்கில புலமையை சோதனை செய்தார். கிராமப்புற பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் மீதான விருப்பத்தை தெரிந்து கொண்டார். ஆசிரியராக பாடம் நடத்திய இந்நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story