அதிமுக நிர்வாகி கொலை - ஈபிஎஸ் கண்டனம்
சிவகங்கை அதிமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையற்ற ஆட்சியால், தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிபறி, பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
முன் பகை தொடர்பான எதிரிகளை முன்கூட்டியே கைது செய்யாததால், அதிமுக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறை தான் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.
Next Story