ஆபிஸில் புகுந்து பெண் அதிகாரியை அடிக்க முயன்ற ஊ. தலைவி கணவர்! ஒன்றுகூடிய ஊழியர்கள்.. அடுத்த பரபரப்பு

x

சிவகங்கையில், பெண் உதவி பொறியாளரை, இரும்பு சேரால் தாக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவியின் கணவரின் செயலை கண்டித்து, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை யூனியன் அலுவலகத்தில், பெண் உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரி பணியில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கோவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முருகன், சாலை போட்டதற்கான பில்லை கொண்டு வந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு கிருஷ்ணகுமாரி, டெண்டர் வைக்காத சாலைக்கு எப்படி சாலை அமைத்தீர்கள் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முருகன் இரும்புச் சேரை தூக்கி, கிருஷ்ணகுமாரியை தாக்க முயன்றுள்ளார். அவரது இந்த செயலை கண்டித்து, அரசு ஊழியர்கள், யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்