நோட் எடுத்து வராத மாணவனை கண்டித்த ஆசிரியர்.. புகார் கொடுத்த மாணவன் - தற்கொலைக்கு முயற்சி செய்த AHM

x
  • விஷம் குடித்து மருத்துவமனையில் உதவித் தலைமை ஆசிரியை உயிருக்குப் போராட்டம்...அவருக்கு ஆதரவாக களம் இறங்கி ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்...பரபரத்துப் போயுள்ளது சிவகங்கை மாவட்டம்...
  • கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தான் இது... இப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன் வகுப்புக்கு நோட் எடுத்து வரவில்லை எனக்கூறி இயற்பியல் ஆசிரியையும்...பள்ளியின் துணை தலைமை ஆசிரியையுமான சிவசங்கரி மாணவனைக் கண்டித்து அடித்ததாகக் கூறப்படுகிறது...
  • சம்பந்தப்பட்ட மாணவன் மேலாண்மை குழு தலைவரின் மகனாம்...
  • இந்த சூழலில் அந்த மாணவன் குழந்தைகள் நல அமைப்பில் புகார் அளித்துள்ளார்... தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் தன்னாயிர மூர்த்தி...மேலாண்மை குழு தலைவர் உள்ளிட்டோர் சிவசங்கரியை விசாரித்ததாகக் கூறப்படுகிறது...
  • மாணவர் புகார் கொடுக்க அவரது தந்தை உதவியதாக பேசப்படும் நிலையில்...இவ்விவகாரத்தில் மேலாண்மை குழு தலைவரும் தலைமை ஆசிரியரும் சேர்ந்து துணை தலைமை ஆசிரியை சிவசங்கரிக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது...
  • முன்பிருந்தே தன்னாயிர மூர்த்திக்கும் சிவசங்கரிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பேச்சும் அடிபடுகிறது...
  • இந்த சூழலில், புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அமைப்பினர் வந்து சிவசங்கரியை விசாரித்துள்ளனர்...
  • கடும் மன உளைச்சலில் இருந்த சிவசங்கரி திடீரென விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்...
  • உடனடியாக அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...உயிருக்குப் போராடி வருகிறார்...
  • இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதவித் தலைமை ஆசிரியை சிவசங்கரிக்கு நீதி கேட்டு பள்ளியில் போராட்டம் நடத்தினர்...
  • ஆசிரியர்களை வகுப்பறைக்கு செல்லவிடாமல் முற்றுகையிட்டு பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
  • இதனால் அரசுப்பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது...
  • மாணவர்களைக் கண்டிக்கவும் முடியாமல்...செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாமல் பல ஆசிரியர்கள் நிலை திண்டாட்டமாக உள்ளதையே இச்சம்பவம் காட்டுகிறது...
  • தந்தி தொலைக்காட்சி செய்திகளுக்காக செய்தியாளர் இளையராஜா...

Next Story

மேலும் செய்திகள்