தொண்டையில் பாட்டிலை இறக்கவிட்ட ஒரு கேள்வி.. ரத்த வெள்ளத்தில் அடித்து கொலை

x

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, குடிநீர் நீரேற்று நிலையத்தில், மது அருந்தியதை தட்டிக் கேட்ட முதியவர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிங்கம்புணரியை அடுத்த முசுண்டப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், அருகில் உள்ள காவேரி கூட்டு குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு நீரேற்றும் நிலையத்துக்குச் சென்றபோது, அங்கு சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர்களை வெளியேறச்சொன்னபோது, வாக்குவாதம் செய்த அந்த கும்பல், மது பாட்டிலை உடைத்து தங்கராஜின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில், தங்கராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த புழுதிபட்டி போலீசார், தங்கராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி டி.எஸ்.பி. மற்றும் சிங்கம்புணரி பகுதி காவல் ஆய்வாளர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைந்து பிடித்து விடுவோம் என உறுதி அளித்ததை பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்