காக்கி சட்டைக்குள் கருணை உள்ளம்.. பெண் SI-யின் நெகிழ வைக்கும் செயல்.. வீடியோ வைரல்

x

காக்கி சட்டைக்குள் கருணை உள்ளம்.. பெண் SI-யின் நெகிழ வைக்கும் செயல்.. அவருக்கே தெரியாமல் எடுத்த வீடியோ வைரல்

நாகை மாவட்டம் திருக்குவளையில், 90 வயது மூதாட்டிக்கு பெண் உதவி ஆய்வாளர் உதவிய காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அரிசி மூட்டையுடன் சாலையோரத்தில் பேருந்திற்காக நீண்ட நேரமாக வெயிலில் நின்று கொண்டிருந்த 90 வயதான மூதாட்டியை, வலிவலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் சுமதி, தனது இருசக்கர வாகனத்தில் பத்திரமாக ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் இறக்கிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை பின்னால் வந்த நபர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்