165 கிலோ மீட்டர் தூரம்.. எதிர்நீச்சல் போட்டு வரும் மாணவர்கள் - கடலூர் சில்வர் பீச் டூ மெரினா பீச்
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக, சில்வர்பீச்சில் இருந்து சென்னை மெரினா கடற்கரை வரை நீச்சல் மூலமாக செல்லும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதனை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மன வளர்ச்சி குன்றிய 9 வயது முதல் 19 வயது வரை உள்ள 14 மாணவர்கள் கலந்து கொண்டனர். 165 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை வர செல்ல உள்ளனர்.
Next Story