சென்னையில் காவலர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய களவாணி
சென்னை திருவொற்றியூரில் காவலர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இருவருக்கு ஆயுதப்படையில் பணியாற்றிவரும் மகனும் இருக்கிறார். இந்நிலையில், செல்லப்பாண்டியன் தனது வீட்டின் கதவை மூடாமல் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் சாவி போட்டு 3 சவரன் நகை, 5 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் மற்றும் பூஜை அறையில் இருந்த உண்டியலையும் திருடிச் சென்றுள்ளனர்.
Next Story